பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, தமிழக வேளாண் துறை செயலர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, தமிழக வேளாண் துறை செயலர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்பி.ஆர். பாண்டியன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், சீர்காழியில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதை தமிழக அரசு தடை செய்யவேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும். தமிழகஅரசு குடிமராமத்து பணிகளுக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்த ரு.100 கோடிக்கு பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக அரசு தெரிவிக்கிறது.
ஆனால், விவசாயிகளுக்கு குடிமராமத்துப் பணியில் எந்த முன்னுரிமையும் அளிக்காமல் வணிக நோக்கில் இப்பணிகள் நடந்துள்ளன. எனவே, குடிமராமத்துப் பணியில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
பயிர் காப்பீடுத் திட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் குளறுபடி நிலவுகிறது. ஆகையால், தமிழக அரசு வேளாண் துணை செயலாளர் தலைமையில் குழு அமைத்து, பயிர்க் காப்பீடு ஒதுக்கீடு செய்ததை ஆய்வு செய்யவேண்டும்.
உரிய பயனாளிகளுக்கு, இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து, கொள்ளிடத்தில் பேட்டி அளித்த பி.ஆர்.பாண்டியன், பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை கைவிடக்கோரியும், டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆக. 29-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com