உலக மண் வள தின விழா

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா அண்மையில் நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா அண்மையில் நடைபெற்றது.
வேளாண் துணை இயக்குநர் ம. நாராயணசாமி விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். மீன்வளப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் எம். நாகூர் மீரான், மண் பரிசோதனை தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டுப் பேசினார்.
நபார்டு வளர்ச்சி வங்கி மேலாளர் டி. கணேஷ், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் வெ. பாலசுப்பிரமணியன், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் கி. ஷர்மிளா ராகேல், அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் மு. அழகர் ஆகியோர் பேசினர். மண்வள மேலாண்மை குறித்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 
வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள்,  வேளாண் கல்லூரி மாணவர்கள், பண்ணை மகளிர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. காமராஜ் வரவேற்றார். மனையியல் உதவிப் பேராசிரியர் ஜெ. செல்வி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com