கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ், கால்நடைகளை காப்பீடு செய்ய, கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ், கால்நடைகளை காப்பீடு செய்ய, கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
கால்நடை இறப்பால், கால்நடை வளர்ப்போருக்கு ஏற்படும் நஷ்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், கால்நடைகளுக்கான காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், கறவை மாடுகள் மற்றும் எருமைகள் சந்தை விலைப்படி காப்பீடு செய்யப்படும். ஒரு கால்நடையை 3 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். 
கால்நடைகளுக்குக் காப்பீடு பெற விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, பிரிமியத் தொகை மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்களை அறிந்து பயன்பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com