"கடல் பசுக்களை பாதுகாப்பதில் மீனவர்களின் பங்களிப்பு அவசியமானது'

அரிதாகி வரும் கடல் பசுக்களையும்,   அவற்றுக்கான வாழ்வியல் சூழலை மேம்படுத்துவதிலும் மீனவர்களின் பங்களிப்பு அவசியமானது என நாகை   மாவட்ட வன உயிரின காப்பாளர் சி. வித்யா கூறினார்.
"கடல் பசுக்களை பாதுகாப்பதில் மீனவர்களின் பங்களிப்பு அவசியமானது'

அரிதாகி வரும் கடல் பசுக்களையும்,   அவற்றுக்கான வாழ்வியல் சூழலை மேம்படுத்துவதிலும் மீனவர்களின் பங்களிப்பு அவசியமானது என நாகை   மாவட்ட வன உயிரின காப்பாளர் சி. வித்யா கூறினார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வெளிமான் இல்ல பயிற்சி கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, கடல்  பசுக்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்துக்குத் தலைமை வகித்த அவர் மேலும் பேசியது :
 கடலில் வாழும் அரிய வகை உயிரினங்களில் பாலூட்டி இனமான கடல் பசுக்களை பாதுகாப்பதில் மீனவர்களின் பங்களிப்பு அவசியமானது. அவைகளுக்கான வாழ்விடங்கள், சூழல்களை பாதுகாப்பதிலும் மீனவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
எனவே தான் மீனவர்கள் உள்ளிட்ட கடல், கடலோரம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் துறையினருக்கு கடல் பசுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்றார் வித்யா.
நாகை மீன்வள பல்கலை. உதவி பேராசியர் ஆனந்த்: நிலத்தில் வாழும் யானைகளைப் போல தோற்றமளிக்கும் கடல் பசுக்கள் தாவர உண்ணி உயிரினமாகும். 2015-இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில், கல்பாக்கம் உள்ளிட்ட தமிழகத்தைச் சார்ந்த கடல் பரப்பில் சுமார் 158 கடல் பசுக்களை கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மீன்பிடி படகுள், ரசாயனப் பயன்பாடுகள் போன்றவைகளால் அந்த உயிரினம் வாழும் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஓம்கார் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் வி. பாலாஜி: கடல் பசுக்கள் தனது குட்டிகளை பராமரிப்பதில் மனிதர்களைப் போலவே அன்பு செலுத்துபவை. இதன் ஆயுள் வயது சுமார் 70 ஆண்டுகளாக உள்ளது. இந்தியாவில் கடல் பசுக்களின் எண்ணிக்கை 250 எனக் கூறப்படுகிறது. இவை கடலில் காணப்படும் 14 வகையான தாழை தாவரங்களை உணவாக உண்ணுகின்றன. இந்த தாவரங்கள் மீன்பிடி சாதனங்கள், பருவம் தவறிய மழை போன்றவைகளால் பாதிக்கப்படுவதால், கடல் பசுக்களின் வாழ்வியல் சூழலும் பாதிக்கப்படுகிறது என்றார்.
மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் பறவையியல்  விஞ்ஞானி டாக்டர் பாலசந்திரன்: தமிழக கடல் பரப்பில் பரவலாக காணப்பட்ட இந்த பசுக்கள், 1994-களுக்குப் பிறகு தொண்டி - ராமேஸ்வரம் கடல் பரப்பில் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன. அதன் பிறகு அவை படிப்படியாக அரிதாகி விட்டன. தற்போதய சூழலில் அவற்றின் எண்ணிக்கை மிக மிக குறைவானதாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
கருத்தரங்கில், கால்நடை அரசு மருத்துவர் மீனாட்சிசுந்தரம், வனச்சரக அலுவலர்கள் அயூப்கான், கோபிநாத், வனவர் இளங்கோவன் மற்றும் கடலோரக் காவல்துறையினர், வனத்துறையினர், மீனவர்கள், சூழல் மேம்பாட்டு மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com