கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றன.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றன.
பறவைகளின் சொர்க்கம் என்றழைக்கப்படும் கோடியக்ரை சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் கார்காலப் பருவத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பூநாரைகள் உள்ளிட்ட 250-க்கும் அதிகமான இனப் பறவைகள் லட்சக்கணக்கில் வலசை வருவது வழக்கம்.
இந்த பறவைகள் குறித்து ஆண்டுதோறும் வனத்துறையினர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும். நிகழாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை காலையில் தொடங்கியது.
திருச்சி மண்டல வனப் பாதுகாவலர் வி. திருநாவுக்கரசு, மாவட்ட வனப் பாதுகாவலர் குருசாமி ஆகியோரின்  வழிகாட்டுதலின்பேரில், இப்பணி நடைபெற்றன.
கோடியக்கரை வனச் சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற கணெக்கெடுப்புப் பணியில், மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவ, மாணவிகள், மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தினர் உள்பட 78 பேர் பங்கேற்றனர்.
இவர்கள் 13 குழுக்களாகப் பிரிந்து காலை 6 முதல் 11 மணி வரை பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதியில் உள்ள பறவைகளை கணக்கெடுக்க 5 பேர் கொண்ட குழுவினர் படகு மூலம் சென்று ஈடுபட்டனர். இப்பணியில் மும்பை இயற்கை வரலாற்றுக் கழக பறவையியல் விஞ்ஞானி கெங்காதரன், ஓய்வுபெற்ற வனச் சரகர்  கோவிந்தராசன், வனவர்கள் இளங்கோவன், சிவசுப்பிரமணியன், வனக் காவலர்கள், வேட்டைத் தடுப்பு  காவலர்கள் குழுக்களுக்கு தலைமை வகித்து வழிகாட்டினர்.
முன்னதாக, புதன்கிழமை இரவு கணக்கெடுப்பாளர்களுக்கு கணக்கெடுப்பு முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com