கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்றி விருது பெற்ற மீனவர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி விருது பெற்ற மீனவர் நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி விருது பெற்ற மீனவர் நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி நாரிழைப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் மே 18 -இல் கடலுக்குச் சென்றனர். மே 20 ஆம் தேதி  வரை அவர்கள் கரை திரும்பவில்லை.
இந்நிலையில், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி நாரிழைப் படகில் மே 20 -இல் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அத்துடன் என்ஜின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 2 பேரையும் மீட்டு, நாகை துறைமுகத்தை அடைந்தனர்.
கடலில் தத்தளித்த 7 மீனவர்களை காப்பாற்றியதன் பேரில் சுப்பிரமணியனுக்கு இந்திய கடலோரக் காவல்படை பொது இயக்குநர் ராஜேந்திர பிரசாத், ஜூலை 10 -இல் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேடல் மற்றும் மீட்பு விருது, ரூ. 10 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, நாகை மீன்துறை இணை இயக்குநர் (மண்டலம்) இரா. அமல்சேவியர், மீன்துறை உதவி இயக்குநர் வி.கே. கங்காதரன், ஆகியோருடன் வந்த சுப்பிரமணியன், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com