வேதாரண்யம் - இடும்பாவனம் வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் - இடும்பாவனம் வழித்தடத்தில் பல ஆண்டுகளுக்கு  முன்பு செயல்பட்டதைப்போல  அரசு நகரப் பேருந்து இயக்க

நாகை மாவட்டம், வேதாரண்யம் - இடும்பாவனம் வழித்தடத்தில் பல ஆண்டுகளுக்கு  முன்பு செயல்பட்டதைப்போல  அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், உலக நுகர்வோர் தின விழா மற்றும் அமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் வி. வீரசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் வி. செல்வராசு, பொருளாளர் கே.வி.எஸ். மோகன் ஆகியோர் முனிலை வகித்தனர்.
விழாவில், பணி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் என். குமரசாமி, அரிமா சங்கத் தலைவர் ஆர். மகாதேவன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நாகூரான், தமிழாசிரியை வெற்றிச்செல்வி, மகளிரணி செல்லம்மாள், நிர்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருவாரூர் (திருத்துறைப்பூண்டி வழி)- வேதாரண்யம் ரயில் தடத்தில் அகலப் பாதையாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், வேதாரண்யம் - கோவை, வேதாரண்யம் - புதுக்கோட்டை புதிய வழித் தடத்தில் அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும்.
 வேதாரண்யம் - வாய்மேடு வழி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் - மயிலாடுதுறை (பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த) தடத்தில் விரைவு பேருந்து இயக்க வேண்டும், வேதாரண்யத்தில்  போக்கு அலுவலர் பகுதி நேர அலுவலகத்தை தொடங்க வேண்டும்.
பொது விநியோகக் கடைகளுக்கு 80 சதவீதம் மட்டுமே  பொருள்கள் வழங்குவதால் பற்றாக்குறை  ஏற்றப்படுவதைத் தவிர்க்க 100 சதவீத தேவைக்கும்  வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com