திருமுறை வாழ்வியல் கருத்தரங்கம்

அறிஞர் உ.வே.சா. தமிழ்ப் பேரவை சார்பில் திருமுறை வாழ்வியல் கருத்தரங்கம், மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

அறிஞர் உ.வே.சா. தமிழ்ப் பேரவை சார்பில் திருமுறை வாழ்வியல் கருத்தரங்கம், மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரவையின் தலைவர் முனைவர் மு. சிவச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் இரா. செல்வக்குமார், மூத்த குடிமக்கள் அவைத் தலைவர் டி.எஸ். தியாகராஜன், தொழிலதிபர் ஏ.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் நாளில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நடைபெற்ற கருத்தரங்கின் முதல் அமர்வில், முனைவர் பனசைமூர்த்தி, சு.ஜெயலெட்சுமி, முனைவர் சு.சேகர் ஆகியோர் முறையே திருஞானசம்பந்தர், நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், ஆசையை வென்ற அருள்ஞானி எனும் தலைப்புகளிலும், 2-ஆம் அமர்வில் முனைவர் சிவ. ஆதிரை, முனைவர் தி. பொன்னம்பலம் ஆகியோர் தாண்டகம் தந்த தலைவன், சமத்துவம் கண்ட சதுரர் எனும் தலைப்புகளிலும் பேசினர்.
இரண்டாம் நாளில் நடைபெற்ற 3 மற்றும் 4-ஆம் அமர்வுகளில் முனைவர் ரா.மாது, முனைவர் எஸ். சந்தானலெட்சுமி, இரா. செல்வக்குமார், முனைவர் ஜி.கிருத்திகா, முனைவர் கிரு.பாண்டியன், ஆகியோர்கள் முறையே சுந்தரர், சுந்தரரும் செந்தமிழும்,  மனித நட்பில் மாண்புடை இறைவன், பெண்ணுரிமை பாடிய பெருமான், நீதிக்குத் துணை நின்ற நிமலன் எனும் தலைப்புகளில் பேசினர்.
நிகழ்ச்சியில், முனைவர் மு. சிவச்சந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில், "நால்வர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வாலும், வாக்காலும் பல்வேறு தமிழ்ப்பணியும், சமுதாயப் பணியும் செய்துள்ளார்கள். நால்வர்களின் காலத்தில் நிகழ்ந்த தமிழ் மலர்ச்சியை இக்காலத்தில் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது' என்றார்.  தொடர்ந்து, அப்பரடிகள், மணிவாசகர் எனும்  தலைப்புகளில் பேசினார். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மருத்துவர் ரா. சரோஜினிக்கு மருத்துவத் திலகம் விருதும், சார்நிலை கருவூல அலுவலர் பா. ராஜலெட்சுமிக்கு சேவைச் செம்மல் விருதும் வழங்கப்பட்டது.
தொழிலதிபர் ஏ. தமிழ்ச்செல்வன், புலவர் சோ. ராசமாணிக்கம், க. ஞானசேகரன்,, உ.வே.சா-வின் உறவினர் எஸ். நடராஜன், பொறியாளர் எஸ். ரெங்கராஜ், எஸ். தெட்சணாமூர்த்தி ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்ச்சிகளில் பேரவை உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com