விவசாயிகள் ஜூலை 31-க்குள் பயிர்க் காப்பீடு பெறலாம்: ஆட்சியர்

நிகழ் காரீப் பருவ நெல் சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பயிர்க் காப்பீடு பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ் காரீப் பருவ நெல் சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பயிர்க் காப்பீடு பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நிகழ் காரீப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதம மந்திரி பசல் பீமா ஜோயனா பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு அறிவித்துள்ள நிதி அளவீடுப்படி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெல் சாகுபடி செய்யப்பட்டதை உறுதி செய்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த சான்றுடன், ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 536 வீதம் பிரிமியத் தொகையை அருகில் உள்ள வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்
ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு பெறலாம்.
செயலர்கள் கவனத்துக்கு...
பயிர்க் காப்பீடு செய்ய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகும் விவசாயிகளுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் காப்பீடு செய்ய கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளிடம் பிரிமியத் தொகையைப் பெற்று உடனுக்குடன் மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com