தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், நாலுவேதபதி ஊராட்சியில் பிரதம மந்திரி நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி, ஐ.ஜி.எப்.எப் திட்டத்தின் கீழ் ரூ. 14.75 லட்சம் மதிப்பில் நடைபெறும் மோட்டார் அறையுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து,  வெள்ளப்பள்ளத்தில் ரூ. 9.98 லட்சம் மதிப்பில் நடைபெறும் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ரூ. 11.18 லட்சம் மதிப்பில் நடைபெறும் மீன் இறங்கு தளத்துக்கான அணுகு சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, பணி நிலைகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், பணிகள் விரைவாகவும், உரிய தரத்துடனும் நிறைவேற்றப்பட்டு, குறித்து காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com