குத்தாலம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் செவ்வாய், புதன்கிழமை  நடைபெற்றன.

குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் செவ்வாய், புதன்கிழமை  நடைபெற்றன.
  குத்தாலம் குறுவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 15 பள்ளிகளின் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜே.முத்தெழிலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.சி. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் பா.காந்திமதி  வரவேற்றார். வட்டார கல்விக்குழு தலைவர் என்.தமிழரசன் போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் இரு மாணவர்களுக்கு பரிசு தொகையாக தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.5000 வழங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எம்.சாந்தி, இந்திய விளையாட்டு ஆணைய மைய பொறுப்பாளர் வி. ரகோத்தமன், சாய் விளையாட்டு ஆணைய பயிற்சியாளர் அனந்தகிருஷ்ணன்,  உதவி தலைமை ஆசிரியர்கள் பி.அன்பழகன், வி.பாலசுப்பிரமணியன், ஆர்.பாமா ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள்  கே.சுவாமிநாதன், ஆர்.வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  தேசிய மாணவர் படை அலுவலர் டி. பிரபு டேவிட் சாமுவேல் நன்றி கூறினார்.
போட்டிகளில் குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பூப் பந்து, கபடி, கோ-கோ, இறகுப் பந்து, மற்றும் பல விளையாட்டுகளில் முதலிடம் பெற்றனர்.  தடகளப்போட்டியில் 19 தங்கம், 13 வெள்ளி மற்றும் 13 வெண்கலமும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோர்  மாணவர் பிரிவு கபடி போட்டியிலும், தடகள போட்டியிலும்  வெண்கல பதக்கம் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com