செளந்தரராஜ பெருமாள் கோயில் ஆனி உத்திரப் பெருவிழா: ஜூன் 22-இல் தொடக்கம்

நாகை ஸ்ரீசெளந்தரராஜ பெருமாள் கோயில், ஸ்ரீ செளந்தர்யவல்லி  தாயார் ஆனி உத்திரப் பெருவிழா வியாழக்கிழமை (ஜூன் 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகை ஸ்ரீசெளந்தரராஜ பெருமாள் கோயில், ஸ்ரீ செளந்தர்யவல்லி  தாயார் ஆனி உத்திரப் பெருவிழா வியாழக்கிழமை (ஜூன் 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கங்களில் ஒன்றாக உள்ள நாகை ஸ்ரீ செளந்தரராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீ செளந்தர்யவல்லி தாயார் ஆனி உத்திரப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ஆனி உத்திரப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளாக கருட வாகனத்தில் பெருமாளும், கருடி வாகனத்தில் தாயாரும் பிரகார உலா எழுந்தளும் நிகழ்ச்சி ஜூன் 25-ஆம் தேதியும், ஜூன் 30-ஆம் தேதி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரியும், ஜூலை 2-ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.
விழா தொடர்ச்சியாக, ஜூலை 7-ஆம் தேதி தெப்ப உத்ஸவமும், 8-ஆம் தேதி தங்க ரத பிரகாரப் புறப்பாடும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com