டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகேயுள்ள வள்ளுவக்குடி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பாமகவினர் கொண்டல் கடைவீதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி அருகேயுள்ள வள்ளுவக்குடி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பாமகவினர் கொண்டல் கடைவீதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பாமக நாகை வடக்கு மாவட்டச் செயலர் லண்டன். அன்பழகன் தலைமை வகித்தார். ஒன்றிய முன்னாள் செயலர் தேனூர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலர்  அருண்குமார், மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார், நிர்வாகி கொண்டல் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணைப் பொதுச் செயலர் பழனிச்சாமி பேசியது:
கொண்டல் கிராமம் குமாரக்குடி சாலையில் வள்ளுவக்குடி ஊராட்சிக்குள்பட்ட விளைநிலத்தில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது. தற்போது நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் உள்ளதால், உயிர்நீர் விடுவதற்கு தண்ணீர் இல்லை. ஆனால், பல குடும்பங்களின் குடியைக் கெடுக்கும்  டாஸ்மாக் கடைகளை இப்பகுதியில் திறப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
எனவே, தமிழக அரசு வள்ளுவக்குடி ஊராட்சி குமாரக்குடி சாலையில் டாஸ்மாக் கடை திறப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும். இல்லையெனில், பாமக சார்பில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
ஆர்ப்பட்டத்தில் மாவட்ட துணைச்  செயலாளர் முரளிராஜ், நிர்வாகிகள் பாலு, தேனூர் காமராஜ் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com