222 பெண்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி: அமைச்சர் வழங்கினார்

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 222 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரத்து 864 மதிப்பில் திருமாங்கல்யத்துக்கான தங்கம் மற்றும்

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 222 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரத்து 864 மதிப்பில் திருமாங்கல்யத்துக்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் செம்பனார்கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 222 பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கத்துடன் ரூ. 25,000, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கத்துடன் ரூ.50,000 வழங்கப்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், வி. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர். ஜெயமீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com