வேதாரண்யம் அருகே ஒளவைப் பெருவிழா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் ஒளவையார் கோயிலில் தமிழக அரசு சார்பில் 43-ஆவது ஒளவைப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
வேதாரண்யம் அருகே ஒளவைப் பெருவிழா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் ஒளவையார் கோயிலில் தமிழக அரசு சார்பில் 43-ஆவது ஒளவைப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
துளசியாப்பட்டினம் கிராமத்தில் உள்ளது ஒளவையார், விஸ்வநாத சுவாமி கோயில். இங்கு, அப்பகுதி மக்களால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த ஒளவைப் பெருவிழாவை 2005 முதல் தமிழக அரசு ஏற்று நடத்துகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி. குமரதுரை, ஒளவையார் பாடல்கள் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
உதவி ஆணையர் எஸ்.எஸ். பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் சு. ராமநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் வெ. நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, ஒளவை காட்டிய வழியில் வாழ்ந்து சிறந்தவர்கள் மன்னர் ஆட்சி முறை காலத்தவர்களா?, வண்ணத்திரை காலத்தில் வாழ்ந்தவர்களா?, சின்னத்திரை காலத்தில் வாழ்பவர்களா? என்ற தலைப்பில் நாகை நாகராஜன் தலைமையில் இசை பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பேச்சாளர்கள் அந்தந்த காலத்துக்கேற்ற உடைகளை அணிந்து பேசினர். பின்னர், ஒளவை எழுந்தருளிய வீதியுலா நடைபெற்றது.
சிறப்பு குறைந்த விழா:
தொடக்க நிலையில், இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்திய பெருவிழா மத நல்லிணக்கத்தோடும் ஒருவார கால இலக்கிய விழாவாகவும் நடைபெற்று வந்தது.
தமிழ்ப் பெண் புலவர் ஒளவைக்கு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை தொடக்கத்தில் அப்பகுதி மக்கள் இணைந்து நடத்தினர்.
2005 முதல் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 நாள்கள் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. நிகழாண்டில் அதுவும் ஒருநாள் விழாவானது.
அரசு தரப்பில் ஒளவைக்கு எடுக்கப்பட்ட விழாவில் விழா அழைப்பிதழில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விழாவில் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது வேதனையானது. போதிய ஏற்பாடுகள் இல்லாததால் பெயரளவிலேயே மக்கள் பங்கேற்றனர். பெண் புலவருக்கு எடுக்கப்பட்ட விழா அழைப்பிதழில் ஒரு பெண் பெயர் கூட இல்லை என்பது இலக்கிய ஆர்வலர்களை வேதனையடையச் செய்தது.
தமிழ்ப் பெண் புலவர் ஒளவைக்கு நடைபெறும் விழாவில், அப்பகுதி மக்களையும் இணைத்துக்கொண்டு, முன்புபோல சிறப்பான விழாவாக நடத்த வேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com