சீர்காழியில் தமிழிசை மூவர் விழா தொடக்கம்:அமைச்சர் பங்கேற்பு

நாகை மாவட்டம், சீர்காழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய தமிழிசை மூவர் விழாவில் அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், சீர்காழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய தமிழிசை மூவர் விழாவில் அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகியோர் புகழைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சீர்காழியில் தமிழிசை மூவர் விழா நடத்தப்பட்டு வருகிறது. சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் கலைப்  பண்பாட்டுத்துறை, தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மையம், நாகப்பட்டினம் மாவட்ட கலைமன்றம் ஆகியவை சார்பில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) தொடங்கிய இந்த விழா 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, மயிலாடுதுறை வருவாய்க்  கோட்டாட்சியர் சுபாநந்தினி, சீர்காழி வட்டாட்சியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன் வரவேற்றார்.
இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்துப் பேசியது:
2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பல்வேறு இசைநூல்கள் தோன்றியுள்ளன.  தமிழிசை மூவர்களால் இந்தியாவுக்கே பெருமை. தமிழிசை மூவர் மணிமண்டபத்தை கலைப் பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.
தொடர்ந்து, தமிழிசை மூவரின் இசைப் பாடல்களுக்கு புஷ்கலா ரமேஷ் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com