பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

நாகப்பட்டினத்தில் மாவட்ட தேசிய பசுமைப்படை மற்றும் சென்னை சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகளை அண்மையில் நடத்தின.

நாகப்பட்டினத்தில் மாவட்ட தேசிய பசுமைப்படை மற்றும் சென்னை சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகளை அண்மையில் நடத்தின.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருப்பொருளாகக் கொண்டு நாகையில் மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி - வினா ஆகியவை நடைபெற்றன. போட்டிகள் மேலோர், கீழோர் என இரு பிரிவுகளில் நடத்தப்பட்டன.
ஓவியப் போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் மருங்கூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆகாஷ், மேல்நிலைப் பிரிவில் மருங்கூர் பள்ளி மாணவர் திவாகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
பேச்சுப் போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி மாணவி காவியா, மேல்நிலைப் பிரிவில் வேதாரண்யம் குருகுலம் மாணவி சினேகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். விநாடி - வினா போட்டியில் கீழோர் பிரிவில் குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், மேலோர் பிரிவில் மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் பங்கேற்று, பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் முத்தமிழ் ஆனந்தன், செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com