பள்ளி வளாகத்தில் காந்தி சிலை சேதம்

நாகப்பட்டினம் தேசிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது.

நாகப்பட்டினம் தேசிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது.
நாகை நீலா வடக்கு வீதியில் தேசிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தின் முன்புறம் 4 அடியிலான காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காந்தி சிலையானது உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளி நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. சம்பவ இடத்துக்கு வந்த நாகை கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் தமிமுல் அன்சாரி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும்  கலைந்து சென்றனர். இதுகுறித்து நாகை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com