தடையை மீறும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை: நாகை ஆட்சியர் எச்சரிக்கை

மீன்பிடித் தடைக்கால உத்தரவை மீறி, மீன்பிடிப்பை மேற்கொள்ளும் மீனவர்கள் மீது சட்ட விதிகள்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தடைக்கால உத்தரவை மீறி, மீன்பிடிப்பை மேற்கொள்ளும் மீனவர்கள் மீது சட்ட விதிகள்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்பிடித் தடைக்காலம் அமலாகியுள்ள நிலையில், நாகை மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சில மீனவர்கள், தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக காரைக்கால், இந்திய கடலோரக் காவல் படை புகார் தெரிவித்துள்ளது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்பிடிப்பை மேற்கொள்வது தமிழ்நாடு கடல்மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை மீறிய செயலாகும்.
மேலும், ஒரு சில மீனவர்கள் தங்களின் மீன்பிடி கலன்களில் சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அழைத்துச் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மீனவர்களின் மீன்பிடி படகு, இயந்திரம் உள்பட அனைத்து உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும். காரைக்காலில் உள்ள தனியார் துறைமுக வளாகத்தின் வரையறைக்குள்பட்ட பகுதியில், நாகை மாவட்ட மீனவர்கள் சிலர் தங்கள் மீன்பிடி விசைப் படகுகளை நிறுத்துவது, அங்கேயே பழுது நீக்கப் பணிகளை மேற்கொள்வது போன்ற விதி மீறிய செயல்களை கண்டிப்பாக மேற்கொள்ளக்கூடாது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com