மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள பழக்கடைகளில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள பழக்கடைகளில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை பகுதியில் உள்ள பழக்கடைகளில் கார்பைட் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் என். தெட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் மயிலாடுதுறை பெரிய கடைத்தெரு மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு, பேருந்து நிலைய  பகுதியில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், பழக்கடைகளில் கார்பைட் கற்கள்  வைத்து பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்கு வைத்திருந்த சுமார் ஒரு டன் எடையுள்ள  மாம்பழங்கள் கண்டறிப்பட்டன.
இதையடுத்து, மாம்பழங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் நகராட்சி குப்பை வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சி. முத்தையன் (மயிலாடுதுறை), ஏ.டி. அன்பழகன் (நாகப்பட்டினம்), டி. சேகர் (சீர்காழி), சி. செந்தில்குமார் (குத்தாலம்) மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com