ரத்ததானம் அளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

பல உயிர்களைக் காப்பாற்ற தம்மால் இயன்ற பங்களிப்பாக ரத்ததானம் அளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.

பல உயிர்களைக் காப்பாற்ற தம்மால் இயன்ற பங்களிப்பாக ரத்ததானம் அளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
கோடைக் காலங்களில் கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதால், ரத்ததானம் பெறப்படும் விகிதம் குறைவாக இருக்கும். இந்தப் பற்றாக்குறையைப் போக்கும் வகையிலும், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையிலும் தற்போது ரத்ததானம் முகாம் நடத்தப்படுகிறது. பல உயிர்களைக் காப்பாற்ற தம்மால் இயன்ற பங்களிப்பாக ரத்ததானம் அளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி. இதைத் தொடர்ந்து, ஆட்சியர் ரத்ததானம் அளித்தார். இந்த முகாமில் ரத்ததானம் அளித்த அரசுத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை அவர் வழங்கினார்.
மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் அருண்பதி, கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com