தீ விபத்தில் வீடுகளை இழந்த 22 குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்  வீ. ராதாகிருஷ்ணன் தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்  வீ. ராதாகிருஷ்ணன் தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.
மயிலாடுதுறை நகரம், 19-ஆவது வார்டுக்குள்பட்ட ஆரோக்கியநாதபுரம் தெற்குப் புதுத் தெருவில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதில், டேனியல், அம்புரோஸ், முத்துலெட்சுமி, தங்கமணி, விக்டர் செ.ஜான், பாத்திமா, அர்ச்சுணன், தேவேந்திரன், கணேஷ் பிரபு, முத்து, கார்த்தி உள்ளிட்ட 20 பேரின் குடிசை வீடுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், பணம், நகைகள், குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள், 1 மினி லாரி, 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலானப் பொருள்கள்  எரிந்து
சேதமாயின.
தகவல் அறிந்த, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் எஸ்.காந்திமதி மற்றும் கட்சியினருடன் சென்று விபத்து நடந்த இடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 22 கும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தனது சொந்த நிதியுதவியாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.44 ஆயிரம் வழங்கினார்.
அத்துடன், அரசின் சார்பில் வழங்கப்படும் உதவியை விரைந்து பெற்றுத் தரவும், வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாப் பெற்று தரவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
அதிமுக நகரச் செயலர் விஜிகே. செந்தில்நாதன், நகர முன்னாள் செயலர்கள் எஸ்.அலி, என்.கிருஷ்ணமூர்த்தி, நகரப் பொருளாளர் எஸ். உமாசந்திரன், துணைச் செயலர் கே. கார்த்தி, கட்சியின் வார்டு செயலர் கணேஷ்பிரபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
ரோட்டரி சங்கம் உதவி
டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத் தலைவர் பி. செந்தில்குமார், செயலர் வெற்றிவேலன், மயிலாடுதுறை ஜேசீஸ் சங்கத் தலைவர் கோவி. அசோகன் ஆகியோர் உதவிகளை வழங்கினர்.
பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆறுதல்
தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலர் கே. ராஜவேலு, நாகை மாவட்டத் தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட அக்கட்சியினர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com