முத்துசட்டைநாதர் சுவாமி 61-ஆவது ஆண்டு உத்ஸவம்

சீர்காழியில் சட்டைநாதர்கோயிலில் முத்துசட்டைநாதர் சுவாமி 61-ஆவது ஆண்டு உத்ஸவத்தையொட்டி, சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழியில் சட்டைநாதர்கோயிலில் முத்துசட்டைநாதர் சுவாமி 61-ஆவது ஆண்டு உத்ஸவத்தையொட்டி, சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச்  சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருநிலைநாயகி அம்மன் உடனாகிய  பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவம்  நிகழாண்டு கடந்த மே 1-ஆம் தேதி நடைபெற்றது.
உத்ஸவத்தின் நிறைவாக முத்துசட்டைநாதர் சுவாமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக யதாஸ்தானத்திலிருந்து முத்துசட்டைநாதர் சுவாமி புறப்பாடாகி வசந்த மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து அனுக்ஞை ஸ்தாபனபூஜை, மஹன்யாஸபூர்வக மஹாருத்ரஜபம், ஏகாதச ருத்ர ஹோமங்கள்  சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் முத்துசட்டைநாதர் சுவாமிக்கு மஞ்சள்,திரவியப் பொடி, பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம்  முதலான 51 வகையான வாசனை பொருள்களைக் கொண்டு விரிவான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன  இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார். இரவு மங்கள இசையுடன், புஷ்ப விமானத்தில் முத்துசட்டைநாதர் சுவாமி  யதாஸ்தானம் திரும்பும் நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, முத்துசட்டைநாதர் சுவாமிக்கு யதாஸ்தானத்தில் சகஸ்ரநாம அர்ச்சனையும் புஷ்பாஞ்சலி, தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மூலவர் சட்டைநாதர் சுவாமிக்கு  புனுகு சாற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com