தலைஞாயிறு பகுதியில் மீண்டும் மழை: வெள்ளம் வடிவதில் தாமதம்

நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் அண்மையில் பெய்த கன மழையால் பெருக்கெடுத்துள்ள வெள்ள நீர் கடல் சீற்றம் காரணமாக வேகமாக வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் அண்மையில் பெய்த கன மழையால் பெருக்கெடுத்துள்ள வெள்ள நீர் கடல் சீற்றம் காரணமாக வேகமாக வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைஞாயிறு பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ள நீர் குடியிருப்புகள் மற்றும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விளைநிலங்களில் சூழ்ந்துள்ளன. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள வண்டல், குண்டூரான்வெளி கிராமங்கள் மற்றும் பழையாற்றங்கரை கிராம மக்களின் பயன்பாட்டுக்கு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை பகலில் மழை இல்லாததால், வெள்ள நீர் வேகமாக வடிந்தது. பல இடங்களில் உணவு அளிப்பதும் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. அத்துடன் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு நிலையால் கடலில் சீற்றம் சற்று அதிகரித்துள்ளது. இதனால், வடிகால் ஆறுகளின் கழிமுகங்களில் தண்ணீர் வடிவதில் சற்று தேக்க நிலை உள்ளது. மழையால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான வண்டல், குண்டூரான்வெளி, பழையாற்றங்கரை போன்ற இடங்களில் உள்ள மக்கள் நிரந்தர தீர்வை வலியுறுத்தி முகாம்களுக்கு செல்ல மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கன மழை தொடரும் பட்சத்தில், ஏற்கெனவே மழை ஈரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போருக்கு பாதிப்புகள் அதிகமாக வாய்ப்புள்ளது.
எனவே, இப்பகுதியில் கன மழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com