வேதாரண்யம் அருகே பாலம் கட்டும் பணிக்கான தடுப்பில் உடைப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மண் தடுப்பு மழை வெள்ளத்தால் சேதமடைந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மண் தடுப்பு மழை வெள்ளத்தால் சேதமடைந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
வேதாரண்யம் கால்வாயின் (உப்பனாறு) குறுக்கே ரூ. 11 கோடியில் செம்போடை- பெரியகுத்தகை, புஷ்பவன் இணைப்புப் பாலம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த கட்டுமானத்துக்காக கால்வாயின் குறுக்கே சுமார் 150 மீட்டர் தொலைவுக்கு தாற்காலிக மண் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் கட்டுமானம் மேற்கொள்ள ஆயத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், தலைஞாயிறு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கனமழையால் வெள்ள நீர் கால்வாயில் தேங்கி கடலுக்குள் வடிந்து வந்தன. தடுப்பின் நடுவே குழாய்கள் போடப்பட்டிருந்தாலும், அது தண்ணீர் வடிவதற்கு போதுமானதாக இல்லாததால் ஆற்றின் ஒரு பக்கத்தில் தேக்கம் இருந்து வந்தது.
தற்போது கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக வெள்ள நீர் வடிவது தாமதமாகி பெருக்கெடுத்த நிலையில், மண் தடுப்பு உடைந்தது. இதனால், உடைப்பின் வழியே வெள்ள நீர் பெருக்கெடுத்து, தோப்புத்துறை பகுதி வழியாக கடலுக்குச் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com