குழந்தைகள் தின விழா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பெட்ராக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பெட்ராக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் எஸ்.கே.எஸ்.வி.வி. அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எம்.கே. ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
கூடுதல் கல்வி அலுவலர் கே. ராஜமாணிக்கம், எஸ்.எஸ். அறக்கட்டளையின் செயலாளர் மல்லிகா தென்னரசு, பெட்ராக் அமைப்பின் திட்ட மேலாளர்  ஜெரால்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், வேட்டைக்காரனிருப்பு, கோடியக்கரை, கோடியக்காடு, நாலுவேதபதி, புதுப்பள்ளி, மணியன்தீவு, விழுந்தமாவடி உள்ளிட்ட கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற நடனம், நாடகம் உள்ளிட்ட கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், விநாடி - வினா போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன. சிறார் படைப்பு திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் சிறார்களுக்கான மாத  பருவ மடல் வெளியீடு, பெண் கல்வி விழிப்புணர்வுக்கான பழமொழி பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சி. அன்பழகன், தொழிற்கல்வி ஆசிரியர் சி. நாகராஜன், சமூக ஆர்வலர் செல்லம்மாள், பெட்ராக் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com