எருக்கூர் தேவாலயத்தில் வெண்கலச் சிலை திருட்டு

சீர்காழி அருகே எருக்கூரில் உள்ள தேவாலயத்தில் குழந்தை இயேசு வெண்கலச் சிலையை செவ்வாய்க்கிழமை காலை மர்ம நபர் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சீர்காழி அருகே எருக்கூரில் உள்ள தேவாலயத்தில் குழந்தை இயேசு வெண்கலச் சிலையை செவ்வாய்க்கிழமை காலை மர்ம நபர் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எருக்கூர் கிராமம் புத்தூர் மதகடி அருகே தூய சிந்தாத்திரை மாதா (நற்பயண அன்னை) தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இதனால், பக்தர்கள் எந்நேரமும் வந்து,  பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர்,  அங்கு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தை இயேசு வெண்கலச் சிலையை திருடிச் சென்றுள்ளார். மர்ம நபர் சிலையைத் திருடும் காட்சி தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, தேவாலய நிர்வாகிகள் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இத் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com