பயிர்க் காப்பீடு கோரி முற்றுகைப் போராட்டம்

நாகை ஊராட்சி ஒன்றியத்தில் பயிர்க் காப்பீடு இழப்பீடு பட்டியலில் விடுபட்ட கிராமங்களுக்கு உடனடியாக பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி

நாகை ஊராட்சி ஒன்றியத்தில் பயிர்க் காப்பீடு இழப்பீடு பட்டியலில் விடுபட்ட கிராமங்களுக்கு உடனடியாக பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி, நாகையில் பயிர்க் காப்பீடு நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2015-16 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளுக்குக் கிடைக்கப் பெறுவதில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. இந்நிலையில், நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 5 கிராமங்கள், பயிர்க் காப்பீடு இழப்பீடு பட்டியலில் விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இழப்பீடு பட்டியலில் விடுபட்ட கிராமங்களுக்கும் உரிய பயிர்க் காப்பீடு இழப்பீட்டை வழங்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நாகை, நீலா தெற்கு வீதியில் உள்ள தனியார் பயிர்க் காப்பீடு நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு விவசாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தினிடையே, தொடர்புடைய பயிர்க் காப்பீடு நிறுவனத்தினர் போராட்டக் குழு நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையின் நிறைவில்,  பயிர்க் காப்பீடு நிறுவனத்தின் மண்டல மேலாளர் நவ. 16-ஆம் தேதி நாகை வரும் போது, இந்தப் பிரச்னை குறித்து முடிவெடுக்கப்படும் என பயிர்க் காப்பீடு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com