பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

வேதாரண்யம் பகுதியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் பகுதியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றியத்துக்குள்பட்ட தோப்புத்துறை (இந்து), தோப்புத்துறை(முஸ்லீம்), ராமகிருஷ்ணாபுரம்,  மூன்றாம் தெரு, தாணிக்கோட்டகம், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம்-2, 3, தகட்டூர், நெய்விளக்கு,செண்பகராயநல்லூர் ஆகிய 12 குறுவள மையங்களில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தோப்புத்துறை (இந்து) குறுவள மையத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எம்.கே. ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். கூடுதல் கல்வி அலுவலர் கே. ராஜமாணிக்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெனிடிக் சேவியர், தலைமையாசிரியர் புயல் குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. நாகூரான் உள்ளிட்டோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இதேபோல், தகட்டூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பயிற்றுநர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வம் கண்காட்சியை தொடங்கி வைத்தார். காமராஜர் சிலைக்கு சமூக ஆர்வலர் சிவாஜி மாலை அணிவித்தார். ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சியில் 250 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் இடம் பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com