சுற்றுப்புறத் தூய்மைக்குப் பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, தொற்றுநோய்கள் பரவாமலிருக்க பொதுமக்கள் சுற்றுப்புறத் தூய்மைப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, தொற்றுநோய்கள் பரவாமலிருக்க பொதுமக்கள் சுற்றுப்புறத் தூய்மைப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை அவுரித்திடலில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற, வடகிழக்குப் பருவமழை மற்றும் டெங்கு நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தின்  சுற்றுப் பயணம் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது :
நாகை மாவட்டத்தில் டெங்கு நோய் மற்றும் பருவமழை தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வு தேவை. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுற்றுப்புறத் தூய்மைப் பராமரிக்க வேண்டியதில் அனைவரது பங்களிப்பும் அவசியம்.
மழை நீர் தேங்கிய பகுதிகளிலிருந்து மழை நீரை வடியச் செய்யும் பணிகள், கொசு மருந்து தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.  இப்பணிகள் முழுமைப் பெற, பொதுமக்கள்  சுற்றுப்புறத் தூய்மையாகப் பராமரிக்க முக்கியத்துவம் அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்.
இதைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பிரசார வாகனப் பயணத்தை ஆட்சியர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ். அசோகன், நாகை குடிநீர்த் திட்ட கோட்ட நிர்வாகப் பொறியாளர் ராமச்சந்திரன், வட்டாட்சியர் ராகவன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், விழிப்புணர்வு பிரசாரக் கலைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com