ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஊக்குநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாகை மாவட்டம், செம்பனார்கோயிலில் கோட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், செம்பனார்கோயிலில் கோட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய ஆணையர்கள் மஞ்சுளா, வாசுதேவன், எழில் நக்கீரன், மோகனசுந்தரம், கோவிந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூய்மை கிராம இந்தியா திட்டத்தின் கீழ் செம்பனார்கோயில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை ஒன்றியப் பகுதிகளில் கிராம ஊராட்சிகளில் ஒட்டு மொத்தமாக தூய்மை செய்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தல், 100 நாள் பணியாளர்களுக்கு மருதத்துவ பரிசோதனை செய்தல் மற்றும் ஊராட்சி பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், தனிநபர் கழிப்பறை கட்டுதல் போன்ற பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டன. இதில் மயிலாடுதுறை கோட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஊக்குநர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டன.
இதில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், விஜயலட்சுமி, ஞானசெல்வி, முருகேசன், ஜான்சன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், சுகாதாரத்துறை ஊக்குநர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com