பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, நாகை மாவட்டம், சீர்காழியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை விவசாயிகள்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, நாகை மாவட்டம், சீர்காழியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகேயுள்ள வள்ளுவக்குடி கிராமத்தில் 2016-17 -ஆம் ஆண்டில்  சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்க் காப்பீடுத் தொகை கட்டியிருந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளுவக்குடி கிராமத்துக்கு பயிர்க் காப்பீடுத் தொகையாக 87.99 சதவீதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் காப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்தனர். இதையொட்டி, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விரைவில் பயிர்க் காப்பீடுத் தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன்பேரில், அப்போதைய போராட்டம் கைவிடப்பட்டது. அதிகாரிகள் உறுதி அளித்தவாறு இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த வள்ளுவக்குடி, கொண்டல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அருள்குமார் தலைமையில் கூட்டுறவுத் துறை, புள்ளியல்துறை, வேளாண்மைத் துறை, பயிர்க் காப்பீடு நிறுவனம் ஆகியவற்றைக் கண்டித்து, சீர்காழியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com