நாகை - தஞ்சை சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நாகை ஒன்றிய மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நாகை ஒன்றிய மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை ஒன்றிய மதிமுக நிர்வாகிகள் கூட்டம், நாகையை அடுத்த சிக்கலில் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி. அய்யாப்பிள்ளை தலைமை வகித்தார்.
மாவட்டப் பிரதிநிதி சீனி. பழனிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் கே. ராஜேந்திரன், அவைத் தலைவர் எஸ். அனபாயன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், நாகை நகர கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைய வேண்டும், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளர் ஏ. ஷேக் அலாவுதீன் வரவேற்றார். மாணவரணி அமைப்பாளர் என். நவநீதம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com