மஞ்சக்குடி கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி தாளாளர் எம்.ஜி. ஸ்ரீநிவாசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், குடவாசல் எய்ம் பார் சேவா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசும்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஒரு சில இடங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வாழும் இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளையே உண்ண வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி நிலவேம்பு குடிநீரை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com