காவிரி மகா புஷ்கரம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: இன்று தருமையாதீனத்துக்கு புஷ்பாஞ்சலி

காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, காவிரியில் புனித நீராட வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது.நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கரம் விழா செப்.12-ஆம்
காவிரி மகா புஷ்கரம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: இன்று தருமையாதீனத்துக்கு புஷ்பாஞ்சலி

காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, காவிரியில் புனித நீராட வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கரம் விழா செப்.12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
கடந்த 4 தினங்களாக, மகா புஷ்கரம் விழாவையொட்டி துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளிலும் சிறப்பு வழிபாடுகள், ஹோமங்கள், யாக பூஜைகள், காவிரி ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
4-வது நாளான வெள்ளிக்கிழமை காலை துலாக்கட்ட காவிரியின் தென்கரையில் வியாபாரம் பெருக்கும் ஸ்ரீ ஸ்வர்ணா கர்ஷண ஸ்ரீ பைரவ ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பின்னர் யாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் புஷ்கரணியில் கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை நேர நிகழ்வாக காவிரி மகா ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் ஸ்ரீ காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார். அப்போது பூம்புகார் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இல.முத்துக்குமாரசாமி எழுதிய காவிரியின் மகிமை என்ற நூலை விஜயேந்திரர் வெளியிட, அதை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
போலீஸார் நகரின் முக்கிய வீதிகளிலும் விழா நடைபெறும் துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மகா புஷ்கரம் விழாவின் 5-ஆவது நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தருமையாதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் பாதபூஜை நடைபெறவுள்ளது.
தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புஷ்பாஞ்சலி மற்றும் பாத பூஜைகளை செய்விக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரி மகாபுஷ்கரம் விழாவின் ஒருங்கிணைப்பாளர் சென்னை எஸ்.மகாலெட்சுமி மற்றும் விழாக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) மாலை 6 மணிக்கு சூரியனார் கோயில் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் பாத பூஜைகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com