சேந்தங்குடி துர்கையம்மன் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை வட்டம், சேந்தங்குடி கிராமத்தில் உள்ள துர்கையம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கான குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டம், சேந்தங்குடி கிராமத்தில் உள்ள துர்கையம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கான குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகளும், 4-ஆம் கால யாக பூஜைகளும், கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீர் அருள்மிகு துர்கையம்மன், சப்த மாதா, ராஜகோபுரம், அருள்மிகு விளாவடியப்பர், அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் விமானங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. 9 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக காலை 7.45 மணிக்கு அருள்மிகு அய்யனார், அருள்மிகு ஊரடச்சம்மன் ஆகிய பரிவாரத் தெய்வங்களின் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில், சேந்தங்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் பி. கண்ணதாசன், நிர்வாக அலுவலர் எம்.எஸ்.பி. பி.ராஜசேகரன், சேந்தங்குடிதெய்வ நற்பணி மன்றத்தினர்கள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com