எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

நாகை ஒன்றியம், செல்லூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை ஒன்றியம், செல்லூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
செல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து, அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படும் முகாமில் 15 மருத்துவர்கள் நோயாளிகள் இருக்குமிடத்துக்கே வந்து பரிசோதனை செய்து சிகிச்சையளிக்க உள்ளனர். இந்த முôமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு முறிவு சிகிச்சை, குழந்தை மருத்துவம், காசநோய், தொழுநோய் போன்றைவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள், இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், முதியோருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மகப்பேறு தாய்மார்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் சிறப்பு மருத்துவர்களால் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. தொடர் சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப எந்த மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும் என்ற பரிந்துரையும் வழங்கப்பட உள்ளது.
அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிந்து சிறப்பு மருத்துவ சிகிச்சையும், சிறுநீர், ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. ஆகிய பரிசோதனைகளும் முகாம் நடைபெறும் இடத்திலேயே இலவசமாக வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 328 ஆண்கள், 229 பெண்கள் உட்பட மொத்தம் 557 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். ஒரு பெண் குழந்தை தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஆர். செல்வகுமார், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com