எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடை அமைக்கும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

நாகை அருகேயுள்ள பாலையூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மேடை அமைக்கும் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

நாகை அருகேயுள்ள பாலையூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மேடை அமைக்கும் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா செப். 20 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மேடை அமைக்கும் பணி நாகை அருகேயுள்ள பாலையூரில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார். ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் கே. கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியது:
ஏழை, எளிய , விவசாய மக்களை நேசித்த தலைவராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவரது நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் தொடங்கியது. தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. மேலும், செப். 17 -இல் நாமக்கல்லில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 14 -ஆவது மாவட்டமாக நாகையில் செப். 20 -இல் நடைபெறுகிறது.
இதற்கென நாகை கிழக்குக் கடற்கரைச் சாலை, பாலையூரில் விழா மேடை அமைக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் சிரமமின்றி விழாவுக்கு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பங்கேற்று, எம்.ஜி.ஆர். உருவப் படத்தை திறந்து வைக்கிறார். பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு நலத் திட்டங்களையும் வழங்குகிறார். மேலும், நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர், மக்களவை துணைத் தலைவர், அமைச்சர்கள் , நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.
அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி. பாரதி (சீர்காழி), வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், வருவாய்க் கோட்டாட்சியர் ம. கண்ணன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com