கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 89 லட்சம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்

நாகை மாவட்ட கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் க

நாகை மாவட்ட கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
நாகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
நாகையை உள்ளடக்கிய கடலூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு தீபாவளி 2017-க்கன விற்பனை இலக்கு ரூ. 17.5 கோடி. இதில், நாகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கான விற்பனை இலக்கு ரூ. 89 லட்சம்.
தீபாவளியையொட்டி, புதிய ரகங்களாக இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள், நெகமம், கோவை காட்டன் மற்றும் கோரா புடவைகள், சேலம், ஜெயங்கொண்டம் காட்டன் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, 100 சதவீத பருத்தி சட்டைகள், லினன் காட்டன் சட்டைகள் அறிமுகப்பட்டுள்ளன. மீரட் போர்வைகள், சுடிதார் மெட்டீரியல்ஸ், ஜமுக்காளம், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு ரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மிதியடிகள், நைட்டீஸ் மற்றும் உள்பாவாடை ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
செப். 15-ஆம் தேதி முதல் துணி வகைகளுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வட்டியில்லா சுலப தவணை கடன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
ரூ. 2 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் (ரொக்கம்) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, வி. ராதாகிருஷ்ணன், கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டல மேலாளர் அ. கோபால், நிர்வாகக் குழு உறுப்பினர் த. ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com