பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

நாகையில் நடைபெற்ற பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகையில் நடைபெற்ற பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நாகை, நாகூர், சிக்கல் ஆகிய இடங்களில் 7 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றன. 1,800-க்கும் அதிகமான தேர்வர்கள், தேர்வில் பங்கேற்றனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியர்கள் 14 பேரும், ஆசிரியர்கள் 165 பேரும், அலுவலகப் பணியாளர்கள் 37 பேரும் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சோதனை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com