தலைஞாயிறு பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணிகள்:  வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகளை வேளாண் இணை இயக்குநர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகளை வேளாண் இணை இயக்குநர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
தலைஞாயிறு வட்டாரத்தில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகள் தொடர்பாக நாகை வேளாண் இணை இயக்குநர் சேகர் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர்,அவர் தெரிவித்தது: செப்டம்பர் மாதம் இறுதி முதல் அக்.10  வரையிலான காலத்தில் 120 முதல் 135 நாள்களுடைய மத்திய கால நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்வது ஏற்றது. அக்.10-க்கு மேல் 105 முதல் 115 நாள்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிர் ரகங்களை விதைக்கவேண்டும். சம்பா பருவத்துக்கேற்ற ரகங்களான ஆடுதுறை-38, மற்றும் 46,49, கோவை-50, என்எல்ஆர்34449,  சொர்னசப்-1, திருச்சி-1 ஆகிய ரக நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறுகிய கால ரகங்களான கோ-51, ஆடுதுறை-42,43,45  போன்ற நெல் ரகங்களும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதை  விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு வேளாண் பணிகளைத் தொடங்க இணை இயக்குநர் சேகர் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com