யோகாவை கட்டாயமாக்கக் கூடாது: எம். தமிமுன் அன்சாரி அறிக்கை

யோகாவை கட்டாயமாக்கக் கூடாது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலர் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

யோகாவை கட்டாயமாக்கக் கூடாது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலர் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   தமிழக அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்  கட்டாயமாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது சர்ச்சையை  உருவாக்கியுள்ளது. மத்திய அரசை குளிரச்  செய்யும் வகையில் யோகாவை கட்டாயமாக்கி திணிப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
யோகா என்பது ஒரு உடற்பயிற்சி என்ற அளவில் மட்டுமே இருந்தால் அதை யாரும் குறை கூற மாட்டார்கள். அதை மந்திரங்கள் ஓதி ஒரு மதச் சடங்காக மாற்றி நடைமுறைப்படுத்தும் மறைமுக திட்டங்கள் இருப்பதா
லேயே அதை அனைவரும் எதிர்க்கின்றனர். பல மதங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பயிலும் பள்ளிக் கூடங்களில் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை செயல்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. இரண்டு வகையான உடற்பயிற்சிகளை அறிவித்து, அதில் யோகாவும் ஒன்று என்றால் ஆட்சேபணை இல்லை. அதில் இரண்டில் ஒன்றை  தேர்வு செய்யும் உரிமையை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதே நேரம் கற்பிக்கப்படும் யோகாவில் எந்த மதச் சார்பு கருத்துகளும்,  நடவடிக்கைகளும் சாராமல் அமல்படுத்த வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தற்போது அறிவித்திருக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com