பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முரண்பாடு: விவசாயிகள் புகார்

கொள்ளிடம் பகுதியில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முரண்பாடு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளிடம் பகுதியில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முரண்பாடு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 6 ஊராட்சிகளைச் சேர்ந்த 1,200 விவசாயிகள் நிகழாண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்திருந்தனர்.
இதில் வங்கியில் நகைக்கடன் மற்றும் விவசாயக்கடன் பெற்ற 300 பேர்களுக்கு மட்டுமே 73 சதவீத ஒதுக்கீட்டு என்ற விகிதத்தில் காப்பீட்டுத் தொகை வந்துள்ளது. மீதமுள்ள கடன் பெறாத விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. ஆனால், இதே கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 1,665 பேர் காப்பீடு செய்துள்ளனர். அவர்கள் எந்தக் கடனும் பெறவில்லை. அவர்கள் அனைவருக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வந்துள்ளது.
இது குறித்து கொள்ளிடம் வட்டார விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் வெட்டாத்தங்கரை விசுவநாதன் கூறுகையில், பயிர்க் காப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு இதுவரை வந்து சேரவில்லை. ஆச்சாள்புரம் மற்றும் புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வந்துள்ளது. அதிலும், முரண்பாடு உள்ளது. இதனால், முறைகேடு நடப்பதாகத்தெரிகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் காப்பீட்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, காப்பீட்டுத் தொகை வழங்குவதில் உள்ள முரண்பாடுகளை களையவும், அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com