வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள் பி.வி.கே. பிரபு, கிரிதரன், எழிலரசு, அம்பிகாதாஸ், ராதாகிருஷ்ணன், மா. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜி. சங்கரவடிவேல், இளைஞரணி மாவட்ட நிர்வாகி சி.கே. போஸ், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அதன் மாவட்டச் செயலர் நாகை மாலி, முன்னாள் எம்எல்ஏ வி. மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வி. முருகையன், ஒன்றியச் செயலர் வி. அம்பிகாபதி, விவசாயிகள் சங்கச் செயலர் மா. முத்துராமலிங்கம், வெற்றியழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் ஒன்றியச் செயலர் சிவகுரு. பாண்டியன், நகரச் செயலர் ராசேந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. மாரியப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ், நகரச் செயலர் மா.மீ. புகழேந்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
பாஜக சார்பில் அதன் விவசாய அணி மாநில செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே. வேதரத்தினம், நிர்வாகி எஸ். வேதரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பரிமளச்செல்வன் மற்றும் அக்கட்சியின் வேதாரண்யம், தலைஞாயிறு நகர, ஒன்றிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தனர்.
இதேபோல், இந்திய முஸ்லிம் லீக் மாவட்டப் பொருளாளர் பி. சாகுல்ஹமீது உள்பட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com