மாதானம் - பழையபாளையம் இடையே சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

சீர்காழி அருகே மாதானம்- பழையபாளையம் இடையே ரூ.85 லட்சம் செலவில் தார்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ பி.வி. பாரதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

சீர்காழி அருகே மாதானம்- பழையபாளையம் இடையே ரூ.85 லட்சம் செலவில் தார்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ பி.வி. பாரதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
மாதானம் முதல் பழையபாளையம் வரை செல்லும் நெடுஞ்சாலை பழுதடைந்திருந்தது. இந்தச் சாலை வழியாகத்தான் பழையாறு மீன்பிடித் துறைமுகத்துக்கு செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.பிரதான இந்த சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கோட்ட மேம்பாட்டுத் திட்டம் 2017-18 ன் கீழ், 2.6 கி.மீ., தூரத்துக்கு ரூ.85 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியயை எம்எல்ஏ பி.வி. பாரதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அத்துடன், சாலையைத் தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், பழையாறு கடலில் முகத்துவாரத்தில் அடைப்பட்டுள்ள மண்மேடுகளை நவீன ராட்சத இயந்திரத்தைக் கொண்டு அகற்றும் பணியைப் பார்வையிட்ட அவர், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சூரியமூர்த்தி, அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் கே.எம். நற்குணன், மீனவரணி செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com