ஆதி நாகாத்தம்மன் கோயிலில் ஞான சுத்த சித்தி யாகம்

சீர்காழி அருகேயுள்ள குமிளங்காடு சுயம்பு ஆதிநாகாத்தம்மன் சக்தி கோயிலில் உலக நன்மைக்காவும், மழைவளம் வேண்டியும், விவசாயம்

சீர்காழி அருகேயுள்ள குமிளங்காடு சுயம்பு ஆதிநாகாத்தம்மன் சக்தி கோயிலில் உலக நன்மைக்காவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் தழைத்தோங்கவும் ஞானசுத்த சித்தி  யாகம் செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது.
யாகம் அசுவினி பூஜை, கோ பூஜையிலிருந்து தொடங்கியது. விலங்குகள், மனிதர்கள்,  முதியோர்கள், குழந்தைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அனைத்து வகையான தாவரங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், 1,008 வகையான நறுமணப் பொருள்கள், மூலிகைப் பொருள்கள் யாக குண்டத்தில் இடப்பட்டன.
இறுதியில், ஒரு பவுன் தங்கத்தாலான தாலி, வைர மூக்குத்தி, வெள்ளிக் கொலுசுகள் மற்றும்  நவரத்தினங்களும் யாக குண்டத்தில் இடப்பட்டு, விலை உயர்ந்த பட்டுப் புடவையும் யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்டன. மறுநாள் அதிகாலை ஆலயத்துக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் வைக்கும் விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com