வைத்தீஸ்வரன்கோயிலில் 3,008 தீபம் ஏற்றி வழிபாடு

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பஞ்சாட்சர மந்திரம் ஜபத்துடன் கோயில் முழுவதும் 3,008 தீபங்கள் ஏற்றி செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பஞ்சாட்சர மந்திரம் ஜபத்துடன் கோயில் முழுவதும் 3,008 தீபங்கள் ஏற்றி செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனித்தனி  சன்னிதிகளில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
சிவராத்திரியையொட்டி, வைத்தியநாதசுவாமி பௌர்ணமி மன்றத்தின் சார்பில் பக்தர்கள் பஞ்சாட்சர ஜபத்துடன் சுவாமி சன்னிதி, அம்மன் சன்னதி, கொடிமரம், உள், வெளி பிரகாரம், ஆதிவைத்தியநாதர் சன்னிதி என கோயில் முழுவதும் 3,008 அகல் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பௌர்ணமி பஞ்சதீப வழிபாட்டு மகிமைகள் குறித்து கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
சிவராத்திரி மகிமை குறித்து பி. செல்வம், ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com