நெல் விற்பனைக்கு 6 வகையான ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்

நேரடி நெல் கொள்முதல் நிலைய விற்பனைக்கு 6 வகையான ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை விவசாயிகள் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. முருகேசன் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலைய விற்பனைக்கு 6 வகையான ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை விவசாயிகள் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மண்டலத்தில் நிகழ்ப் பருவ சம்பா நெல் கொள்முதலுக்காக 213 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 9,600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 
சன்ன ரகம் நெல்லுக்கு ஊக்கத் தொகை ரூ. 70 சேர்த்து ரூ. 1,660-ம், பொது ரக நெல்லுக்கு ஊக்கத் தொகை ரூ. 50 சேர்த்து ரூ 1,600-ம் விலையாக வழங்கப்படும்.  
விவசாயிகளிடம் பெறப்படும் நெல்லுக்கான தொகை மின்னணு முறையில் விநியோகிக்கப்படுவதால், வங்கிக் கணக்கு புத்தக நகலையும், வேறு ஒரு ஆதாரத்தின் நகலையும் வழங்க வேண்டும். 
ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், கிஸான் விகாஸ் பத்திரம் நகல், விவசாயிகள் காப்பீடு செய்த நகல் (நடப்பு), விவசாயக் கடன் வாங்கியதற்கான ஆதார நகல் ஆகிவயற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து வழங்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com