வேதாரண்யம் பகுதி  சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரிப் பெருவிழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை இரவு  நடைபெற்றன.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரிப் பெருவிழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை இரவு  நடைபெற்றன.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் சிவராத்திரி பெருவிழாவையொட்டி சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியில், கடலூர் புலவர் மு. ராமலிங்கம் சுவாமிகள் பங்கேற்று "கொடியவர்கள் பெற்ற வரமும், அடியார் பெற்ற பதமும்' என்ற தலைப்பில் பேசினார். இதேபோல, மணமேல்குடி இரா. சின்னையா உள்ளிட்டோர் பேசினர். விழாவில், திருநாவுக்கரசர் வார வழிப்பாட்டு மன்றத்தினர் பங்கேற்று தேவாரப் பாடல்களைப் பாடினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டார் பி.எஸ். சேதுபதி தலைமையிலான ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல, வாய்மேடு அகத்தீஸ்வர சுவாமி கோயில், வண்டுறைமாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com