தேரோட்டம்: வேதாரண்யம் வட்ட பள்ளிகளுக்கு பிப். 26-இல் உள்ளூர் விடுமுறை

நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட

நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பிப். 26 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் திருக்கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப். 26) நடைபெறுகிறது. இதையொட்டி, வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, மார்ச் 3 -ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com